சொந்த பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த 19 பிள்ளைகளின் தந்தைக்கு சிறை

0
173
nineteen children father child abuse, nineteen children father child, nineteen children father, nineteen children, children father child abuse, Tamil Netherand news, Netherland Tamil news

(nineteen children father child abuse)

Utrecht இல் உள்ள நீதிமன்றம், Bunschoten-Spakenburg ஐச் சேர்ந்த 59 வயதான Henk K. எனப்படுபவர் தமது சொந்த குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இனி அவர் தனது 14 பிள்ளைகள் மற்றும் அவரது பேரப்பிள்ளைகளையும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை, என NU.nl தெரிவிக்கிறது.

ஹென்க் கே. மற்றும் அவரது மனைவி டயானாவுக்கு 19 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மத பற்று கொண்டவர்களாகவும் கண்டிப்பான வளர்ப்புடையவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஆனால் 2016 ஆம் ஆண்டில், பல ஆண்டுகளாக தங்களை திட்டமிட்ட வகையில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, தந்தைக்கு எதிராக பிள்ளைகள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

K அவரது 5 பிள்ளைகள தொடர்ந்தும் பூட்டி வைத்து, 10 பிள்ளைகளையும் மாறி மாறி  மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்துள்ளதை நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும் பொது வழக்கறிஞர், 11 வயது மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததையும், ஒரு மகனை ஒரு மேஜையில் சங்கிலியால் கட்டி வைத்து மிரட்டியதையும் கூறிய போதும், இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால் தமது பிள்ளைகள் தம்மை பழி வாங்குவதற்காகவே இவ்வாறு கூறுகின்றனர் என தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்தார்.

 

nineteen children father child abuse, nineteen children father child, nineteen children father, nineteen children, children father child abuse, Tamil Netherand news, Netherland Tamil news

Tamil News Groups Websites