(long time back love letters)
வருங்க்கால கணவருக்குத் தமது கைப்பட காதல் கடிதத்தைத் எழுதினார் இளம் லூவி எடிவியன். 1950களில் அவர் எழுதிய காதல் கடிதத்தைத் தமது திருமணச் சான்றிதழோடு சாடியில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
சாடியில் கடிதமும், சான்றிதழும் இருப்பதை மறந்து ஐந்தாண்டுகளுக்கு முன் அதை நன்கொடையாகக் கடையில் கொடுத்துவிட்டார், எடிவியன்.
அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தக்கூடிய சாடியை வாங்கினார் கேத்தி டேவிஸ். அதை அவர் தமது தோழி லிஸ்ஸி டிக்ஸனுக்கு அளிபளிப்பாகக் கொடுத்துள்ளார்.
ஒரு நாள் எதிர்பாராமல் அந்தச் சாடி விழுந்து உடைந்ததில், அதனுள் இருந்த காதல் கடிதத்தையும் , திருமணச் சான்றிதழையும் லிஸ்ஸி டிக்ஸன்.
அவற்றைப் படமெடுத்து Facebookக்கில் பதிவேற்றம் செய்தார். சில மணி நேரத்திற்குள் எடிவியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் டேவிஸுடன் தொடர்பு கொண்டுள்ளார். வயதான தம்பதியிடம் நேரில் சென்று பொருட்களைத் திரும்பக் கொடுத்தார் டேவிஸ்.
காணாமற்போன காதல் கடிதம் திரும்பக் கிடைத்ததில் மனமகிழ்ந்தார் எடிவியன். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கடிதத்தை எழுதிய அவர், அடுத்த வாரம் தமது 80வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார்.
tags:-long time back love letters
most related Singapore news
இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!
**Tamil News Groups Websites**