பேச்சு பேச்சு மாதிரியே அமையனும் மீறினால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்

0
851
northern province governor doctor strike agreement

northern province governor doctor strike agreement
வட மாகாண ஆளுனர் பேச்சுவார்த்தையின் தீர்வுக்கிணங்க செயற்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய சுற்று நிரூபத்தின் பிரகாரம் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாதன் காரணத்தினால் கடந்த திங்கட் கிழமை வடக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் அரச சுகாதார துறையினரின் கவன ஈனம் காரணமாகவே தமது மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில் வட மாகாண ஆளுநருடன் இடம்பெற்ற பேச்சுவாரத்தையினை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன் குறித்த கொடுப்பனவினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

எனினும் அரச மருத்துவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிரூபத்திற்கான கொடுப்பனவுகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்யவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ் திருவாகரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
northern province governor doctor strike agreement

More Tamil News

Tamil News Group websites :