கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி

0
378
Minister Chidambaram son Karthi accused media malpractice case

Minister Chidambaram son Karthi accused media malpractice case

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு நிபந்தனைகளுடன் இந்திய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமுலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவ்வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன் பிணை வழங்கக் கோரி இருந்தார். இதன் அடிப்படையில் ஜூலை பத்தாம் திகதிவரை அவரை கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,

மே மாதம் 19ஆம் திகதி முதல் 27ஆம திகதி வரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனை களுடன் இந்திய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் திகத ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டிலுள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது.

மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது.

இந்த பயணத்தை இதர நீதிமன்றங்களில் தடை உத்தரவு மற்றும் பிணை வாங்க பயன்படுத்த கூடாது. பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமுலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

Minister Chidambaram son Karthi accused media malpractice case

MORE TAMIL NEWS

TAMIL NEWS GROUP WEBSITES :