தனசிங் உயிரிழப்பு – நீதி கோரி போராட்டம்: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என விசனம்

0
45

தமிழகத்தின் நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் இன்று சனிக்கிழமை (04) சடலமாக மீட்கப்பட்டதைடுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யுமாறு போராட்டக்காரர்கள் பொலிஸாரை வலியுறுத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரு மருத்துவர் குழுவினாரால் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.பிரேத பரிசோதனை முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிதேர பரிசோதனையின் நிறைவடைந்ததன் பின்னர் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்த தகவல் வெளியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை தனசிங் உயிரிழந்தமை தொடர்பில் திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

“திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

ஒழுங்கை காக்க தமிழக அரசு ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.