தமிழினப் படுகொலை; வாகரையில் நினைவேந்தல் நிகழ்வு

0
641

(Tamil Genocide Day marked Vaaharai Batticaloa)
தமிழின அழிப்பின் 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாகரை ஆற்றங்கரையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக இன்றைய தினம் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டும் தமிழினம் அழிக்கப்பட்டும் 09 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், இன்று வரை காணாமல் போன தமது உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித வழக்குகளும் இன்றி சிறைகளில் வாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :

Tags; Tamil Genocide Day marked Vaaharai Batticaloa