கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!

0
345
Attack activists car glass Coimbatore

Attack activists car glass Coimbatore

முன்னாள் எம்.எல்ஏ’வும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை தெற்கு மாநகர மாவட்ட செயலாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் கோவை வடவள்ளியில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது, கூட்டம் முடிந்து சேலஞ்சர் துரை உட்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்கள் ஓணாப்பாளையம் சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது அதிமுக இளைஞர் அணி சந்திரசேகர், அன்பு ஆகியோர் ஆதரவாளர்களுடன் வந்து பிரச்சனையில் ஈடுபட்டதாகவும், கார் கண்ணாடிகளை கல்லால் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது, கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாகவும் கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்,

இந்த கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபம், அதிமுக’வை சேர்ந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுப்படி கடைசி நேரத்தில் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதிமுக’வினரின் இந்த தாக்குதலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :