வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்

0
2654
mullivaikal remember day motorcycle rally Jaffna university students

(mullivaikal remember day motorcycle rally Jaffna university students)
தமிழினப் படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.

இந்தப் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து, அங்கிருந்து முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

பல உயிர்கள் புதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கிய இந்த ஊர்வலத்தில் பெருமளவிலான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்பு உடை அணிந்து, தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி தமிழர் தாயகப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தனர்.

இவர்கள் உயிர்நீத்து 09 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழர்களுக்கான தீர்வு என்பது இன்னும் கிடைக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; mullivaikal remember day motorcycle rally Jaffna university students