ஈரான் ஜனாதிபதியுடன் இரவு விருந்துபசாரத்தில் சஜித் கலந்து கொள்ளாதது ஏன்?: எதிர்கட்சி தலைவர் விளக்கம்

0
42

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக இடம்பெற்ற இரவுவிருந்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளாமை குறித்து அரச சார்பு ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக தாம் வன்மையாக கண்டிப்பதாக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக சில ஊடகங்களில் வெளியான பொய்யான செய்திகளுக்கு சமூக வலைத்தளத்தில் சஜித் பிரேமதாச பதிலளித்திருக்கின்றார். தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றமைக்கு அவர் கண்டனமும் வெளியிட்டிருக்கின்றார்.

பெரிய நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் வரும் போது அவர்களுக்கு விருந்துபசாரத்தில் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பிரதாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றமை வழமையானது.

ஆனால், ஈரானிய ஜனாதிபதி விருந்துபசாரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

இந்த நிலையில் இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக வெளியான செய்தியை சஜித் பிரேமதாச சமூக வலைத்தளத்தில் கண்டித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.