இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா!

0
53

இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களில் பலர் அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதாக அஹ்ரோன் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.