இராக் ராணுவ தளம் மீது பயங்கர தாக்குதல் – அமெரிக்கா சொன்னது என்ன?

0
50

இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இராக் ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் 8 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் இராக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு முன்பாக, இராக் வான்பரப்பில், டிரோன்கள் அல்லது போர் விமானங்களோ எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் இராக் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லை என அமெரிக்கா உடனடியாக எதிர்வினையாற்றியது.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட டிரோன்கள் அல்லது ஏவுகணைகளைக் கொண்டு இரான் திடீர் தாக்குதலை தொடுத்தது. ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் துணைத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியதாக இரான் கூறியது.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரானின் இஸ்ஃபஹான் பிராந்தியத்தின் மீது வெள்ளிக்கிழமை காலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இந்த பதற்றம் தணிவதற்குள்ளாகவே இராக் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.