அண்மைய சில தினங்களாக சமூக வலைத்தள பயனாளிகள் மத்தியில் முக்கியமாக முகப்புத்தக பாவனையாளர்கள் மத்தியில் அதிகம் பேசப்படக்கூடிய ஒரு விடயம் “Poke” .
உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன?
முகப்புத்தகம் அல்லது facebook என அழைக்கப்படும் ஆரம்ப கால சமூக வலைத்தளத்தினை பயன்படுத்தும் நபர் ஒருவர் தனது நண்பர் ஒருவருக்கு “ஹலோ” அல்லது “ஹாய்” என இலகுவாக தொடர்புகொள்ள பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாக இந்த “Poke” முறை கருதப்படுகிறது.
புரியும் வகையில் எளிதாக கூறப் போனால் “poke” எனப்படும் இந்த முறை மூலம் உங்கள் இதயத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் ஒரு நபருக்கு “Invite” போன்ற ஒன்றை அனுப்பலாம்.
நாளாந்தம் கனவுகளுக்கு மத்தியில் வேலைப்பளுவுடன் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தமது அன்பை ஞாபகமூட்டக்கூடிய ஒரு சிறிய வழிமுறையாக இது கையாளப்பட்டு வருகிறது.
அன்றாடம் பதிவிடப்படும் பதிவுகளுக்கு React செய்ய comment செய்ய முடியாவிட்டாலும் கூட இலகுவாக ஞாபகபடுத்தக்கூடிய விதத்தில் இது அமைந்துள்ளது.
poke back செய்வதால் என்ன பயன்?
தன்னை மறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் உங்கள் முகப்புத்தக (facebook) நண்பர் ஒருவரை “poke” செய்கிறீர்கள். பின்னர் அவரும் பதிலுக்கு “poke back” செய்யும் போது உங்களுடைய பதிவுகள் உங்கள் நண்பருடைய facebook wall இல் காட்சிப்படுத்த ஆரம்பிக்கும்.
அதேபோல் அவருடைய பதிவுகள் உங்களது facebook wall இல் காட்சிப்படுத்தும். இதன் மூலம் உங்களுடைய நட்பு வலுப்பெறும். புதிதாகும். உங்களையும் யாராவது ‘poke’ செய்தால் ‘poke back’ செய்ய மறந்துறாதீங்க.