உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்டொக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளதாக சந்தை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023 இல் 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் செயலி
மேலும் இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில் டிக்டொக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ரீல்ஸ் அம்சம் முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுவதாக சென்சார் டவர் சுட்டிக்காட்டியுள்ளது.
வீடியோக்கள்
அத்தோடு இன்ஸ்டாகிராமில் கடந்த சில ஆண்டுகளாக டிக்டொக்கை மிஞ்சும் வகையில் அதிகமான காணொளிகள் பதிவேற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு அதிகாரி ஆபிரகாம் யூசெப் குறிப்பிட்டுள்ளார்.