அந்தரத்தில் தொங்கிய 72 வயதுப் பெண்; கடை ஷட்டரில் சிக்கிய ஆடை: பதற வைக்கும் காணொளி!

0
96

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ரோண்டா சைனான் டாஃப் என்ற இடத்தில் அமைந்துள்ள பெஸ்ட் ஒன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் 72 வயதாகும் அன்னா ஹியூஸ் தொழில் புரிகிறார்.

இவர் கடையை திறப்பதற்காக வெளியில் நின்றுகொண்டிருந்த நிலையில் மின்சாரத்தினால் செயல்படும் ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அருகில் நின்று கொண்டிருந்த மூதாட்டியின் ஆடை ஷட்டரில் மாட்டி அவரும் சேர்ந்து ஷட்டருடன் மேலே தூக்கப்பட்டுள்ளார்.

பதட்டத்தில் அருகிலிருந்த பொருட்களை பிடிக்க முயன்ற நிலையில், ஷட்டர் முழுமையாக திறக்கப்பட்டுவிட்டது. சில நொடிகளின் பின்னர் கடை ஊழியர் ஒருவரால் குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.