14 வயது மாணவியை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்

0
175

14 வயதான பாடசாலை மாணவி ஒருவரை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலன்பிந்துனுவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம்

பாதிக்கப்பட்ட மாணவி மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த போது அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பலமுறை பாலியல் துஷ்பிரயோக்திற்குட்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்யவதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.