மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் நடிக்க விரும்பிய சிம்ரன்..

0
172

நடிகை சிம்ரன் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் அவர் தற்போது குணச்சித்திர வேடங்க்ளில் தான் நடித்து வருகிறார்.

கடைசியாக அவர் விக்ரம் உடன் மஹான், ஆர்யா உடன் கேப்டன் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லை. அவர் நடித்த அந்தகன் மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கின்றன.

பொன்னியின் செல்வன்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்ரன் தற்போது அவரது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் X தளத்தில் அவர் பதில் அளித்து இருக்கிறார். அதில் பேசும்போது தான் பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக கூறி இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.