ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயில்: டிஜிட்டல் உலகில் தொடரும் எலான் மஸ்க்கின் ஆதிக்கம்

0
118

பிரபலமான ஜிமெயிலுக்கு போட்டியாக தனது சொந்த மின்னஞ்சல் தளத்தை உருவாக்கி டிஜிட்டல் உலகத்தை கைப்பற்றும் தனது திட்டங்களுடன் எலான் மஸ்க் (Elon Musk) முன்னேறி வருகிறார்.

தென்னாப்பிரிக்க கோடீஸ்வரர் ஏற்கனவே டுவிட்டரின் கட்டுப்பாட்டை எடுத்து சமூக ஊடக பயன்பாட்டின் முகத்தை X என மறுபெயரிட்டு மாற்றியமைத்தார்.

மேலும் எலான் மஸ்க் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு கருவியை ChatGPT க்கு போட்டியாக உருவாக்கியுள்ளார், இது AI தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ்மெயில்

இப்போது கூகுளின் ஜிமெயில் சேவைக்கு போட்டியாக தனது சொந்த மின்னஞ்சல் சேவையான ‘எக்ஸ்மெயில்” ( XMail ) ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் உறுதிபடுத்தியுள்ளார்.

எனினும் குறித்த சேவை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும் இது X பயன்பாட்டில் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிமெயிலின் கதி என்ன?

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜிமெயிலில் 1.8 பில்லியன் மின்னஞ்சல் கணக்குகள் உள்ளன, Outlook இல் அரை பில்லியனுக்கு மேலும், Yahoo Mail இல் 225 மில்லயனுக்கு மேலும் காணக்குள் உள்ளதாக Demand Sage அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

எலான் மஸ்க் எக்ஸ்மெயிலை’வெளியிட முடிவு செய்தாலும், கூகுள் பயனர்களை ஜிமெயிலில் இருந்து விலக்குவது கடினமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.