குவைத்தில் இலங்கையர் மீது துப்பாக்கிச் சூடு: வயிற்று வரை 40 தையல்; வாழ வழியின்றி பரிதவிக்கும் குடும்பம்

0
89

“நாங்கள் ஆதரவற்றவர்களாக இருக்கின்றோம், என் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியில்லை வாழ்க்கையை நடத்த எங்களுக்கு வேறு வழியில்லை எமக்கு நீதிவேண்டும்” – இது புலம்பெயர் நாட்டில் நோய்வாய்ப் பட்டிருக்கும் இலங்கையரான சாகர லக்ஷ்மனனின் மனைவியின் கருத்து.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக புலம்பெயர் நாடு ஒன்றில் வேலை பார்த்துவரும் சாகர லக்ஷ்மன் அங்குள்ள ஒருவரால் சுடப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த ஒன்பது ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு மூன்று முறையே வந்துச் சென்றுள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குவைத் சென்றார்” என அவரின் மனைவி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

குவைத்தில் உணவு விநியோகிம் (டெலிவிரி) செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதனால் அவருக்கு அங்குள்ள வீதிகள் அவருக்கு நன்றாகவே தெரியும்.

அன்று ஜனவரி 10, 2024 அன்று அதிகாலை 04:00 மணியளவில் ஜஹாரா பகுதியில் உள்ள ஒருவருக்கு உணவு விநியோகம் செய்வதற்காக சென்றுள்ளார்.

ஆனால் செல்ல வேண்டிய பாதை மற்றும் வழங்க வேண்டிய இடம் (இடம்) தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டு மீண்டும் சரியான இடம் கண்டுப்பிடிக்கப்பட்டு மீண்டும் சென்றுள்ளார்.

இறுதியாக, குறித்த இடத்திற்குச் சென்று உணவை வழங்க முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கால் தொண்டையில் இருந்து வயிறு வரை 40 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவர் வைத்தியசாலையில் இருப்பதால் எங்களுக்கு வாழப் பணம் இல்லை.

மூத்த மகள் 08ம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். எனது சிறிய மகள் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கிறாள். வகுப்புகளுக்கு செல்ல வழியில்லை.” என மனைவி கூறியுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் அமைப்பு அவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி யஜீஷ் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விரைவாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்துமாறு சர்வதேச தொழிலாளர் அமைப்பில் முறைப்பாடு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குவைத் அரசாங்கத்திற்கு உத்தரவிடவுள்ளதாக தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆதரவற்ற நிலையில் இருக்கும் சாகர லக்ஷ்மனை ஐந்து மாத சம்பளம் கொடுத்து இலங்கைக்கு அனுப்ப ஹோட்டலின் உரிமையாளர் முயற்சித்துள்ளார்.

தற்போது இலங்கை தூதரகம் இந்த விடயத்தை குவைத் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.