புளொட்டின் சிரேஷ்ட உப தலைவர் நல்லநாதர் காலமானார்

0
101

மாமனிதர் தராகி சிவராம் கொலை குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) நேற்று (22.02) காலமானார். உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் (1980) ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மூத்த போராளியான ஆர். ஆர் மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் மாமனிதர் தராகி சிவராமினை கடத்தி சென்று பீற்றர் எனும் சக கொலையாளி சகிதம் கொலையை அரங்கேற்றியதாக ஆர்.ஆர் என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கைதான இருவரும் பின்னர் புலனாய்வு பிரிவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில் இராகவன் தராகி சிவராமினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளராகியிருந்தார். எனினும் அவர் எதனையும் அறிந்திராத மகான் என விசுவாசிகள் வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் திடீரென நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 62 ஆவது வயதில் காலமானார்.