காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

0
145

1980 மற்றும் 1990களில் பிறந்தவர்களுக்கான காதலர் தின கொண்டாட்டம் என்பது மிகவும் வித்தயாசமானதாக இருந்தது. ஆண்களும் பெண்களும் அவ்வளவாக பேசிக்கொள்ளாத அந்த காலத்தில் ஒருவர் காதலர் தினத்தன்று அணியும் உடைகளின் வண்ணத்தில் இருந்தே அவர்களின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

காதல் ஒவ்வொருவரது மனதில் ஒவ்வொரு பரிமானத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக காதலர் தினம் காதலர்களை சேர்த்து வைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் காதலர் தினந்தன்று அணியும் உடையில் எந்த நிற உடைக்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்.

நீலம்

உலகமே நீல வண்ண கூரையால்தான் போர்த்தப்பட்டுள்ளது. அப்படி பட்ட நீல நிற உடையை அணிவதன் மூலம் நீங்கள் உங்களுக்கான காதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே உங்கள் மீது அன்பு கொண்டவர்கள் உங்களிடம் வந்து ப்ரப்போஸ் செய்யலாம் என்று அர்த்தம். 

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean

ஆரஞ்ச்

மற்றவர்கள் வந்து ப்ரப்போஸ் செய்வார்கள் என்று காத்து கொண்டிருப்பதை விட நீங்களே களத்தில் குதித்து விட வேண்டியதுதான். அப்படியென்றால் நீங்கள் ஆரஞ்ச் நிறத்தை அணிந்து கொண்டு சென்றீர்கள் என்றால் நீங்கள் யாரோ ஒருவருக்கு ப்ரப்போஸ் செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் அன்புக்குரியவர் உங்கள் உடையை பார்த்தே உற்சாகமாகிவிடுவார்.

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean

பிங்க்

பிங்க் நிறம் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. மென்மையான நிறமாக அறியப்படும் பிங்க் நிறத்திற்கு காதலர் தினத்தில் முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில் பிங்க் நிற உடை அணிந்திருந்தால் நீங்கள் அதிர்த்தசாலிகள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆம், உங்கள் காதல் ப்ரப்போஸல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அர்த்தம். 

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean
பச்சை

சிக்னலில் பச்சை நிறம் எப்போது போடுவார்கள் என்று காத்துக் கொண்டிருப்போம். அது போல, காதலர் தினத்தில் நீங்கள் பச்சை நிற உடை அணிந்திருந்தால் பதட்டமாக இருக்க வாய்ப்புண்டு.

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean

ஆம், நீங்கள் ப்ரப்போஸ் செய்த நபர் எந்த பாதிலும் சொல்லாமல் காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார் என்று அர்த்தம். எனவே, பச்சை நிற உடை அணிந்திருந்தால் உங்கள் காதலரின் பதிலுக்காக காத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்

வெள்ளை 

வெள்ளை அமைதியின் சின்னமாக பார்க்கப்படும் ஒரு நிறம். எனவே, நான் எந்த பிரச்சனைக்கும் தயாராக இல்லை, நான் ஏற்கனவே அன்பான காதலரோடு காதலில் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக வெள்ளை நிற உடையை அணிந்து கொள்ளலாம்.

சிவப்பு 

ஏற்கனவே ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கின்றேன் என்று அர்த்தம்

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean

மஞ்சள் 

சமீபத்தில் தான் உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்றால் கண்டிப்பாக மஞ்சள் உடையை அணிந்து கொள்ளுங்கள். அதை பார்த்து உங்கள் மனநிலையை பிறர் புரிந்து கொள்ள முடியும். யாருக்கு தெரியும், யாரோ ஒரு அன்புக்குரியவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் பயணிப்பதற்கான முதல் படியாக கூட இருக்கலாம்.

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean
பெர்ப்பில் அல்லது க்ரே

காதல் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ளும் சிலரும் இருக்கிறார்கள். தெரியாமல் ஏதோ ஒரு உடையை போட்டு விட்டு வெளியே சென்று என்னடா காதலா என்று கலாய் வாங்குவார்கள்.

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean

அப்படி பட்டவர்கள் இந்த தேவையற்ற கிண்டல் கேலியிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பர்ப்பில் அல்லது க்ரே நிற உடையை அணிந்து கொண்டால் உங்களுக்கு இதில் எதிலும் ஆர்வம் இல்லை என்பதை நண்பர்கள் புரிந்து கொள்வார்கள்.

கருப்பு

கருப்பு நிற ஆடை அணிந்திருப்பவர்கள் காதலில் ஈடுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த கருப்பு நிற ஆடையை அணிந்திருப்பார்கள். அவர்களிடம் காதல் சொல்லி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

காதலர் தினத்தில் எந்த நிற உடை அணிந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do You Know What Color Clothes Valentines Day Mean