ஆப்பிள் மற்றும் மாம்பழங்களால் ரூ 8,000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெண்!

0
143

ரூ 300 கோடி ஆண்டு வருவாய் ஈட்டி வந்த நிறுவனத்தை 20 ஆண்டுகளில் ரூ 8,000 கோடி சாம்ராஜியமாக உருவாக்கி சாதித்துள்ளார் நதியா சவுகான்.

பாடசாலை நாட்கள் முதலே

பிரகாஷ் சவுகான் என்பவரால் 1985ல் நிறுவப்பட்டது Parle Agro நிறுவனம். 2003ல் ஆண்டு வருவாய் என்பது ரூ 300 கோடி. ஆனால் 2017ல் அதன் வருவாய் என்பது ரூ 4200 கோடி என அதிகரித்தது. 2023ல் ரூ 8,000 கோடி என உயர்ந்துள்ளது.

தற்போது 37 வயதாகும் நதியா சவுகான் Parle Agro நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மற்றும் கூட்டு நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது மூத்த சகோதரி தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார்.

பாடசாலை நாட்கள் முதலே, ஓய்வு நேரங்களில் மும்பை நகரில் அமைந்துள்ள தலைமையகத்தில் தமது தந்தையுடன் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் நதியா சவுகான். இவர் பிறந்த ஆண்டில் தான் பிரகாஷ் சவுகான் Parle Agro நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

ஆப்பிள் மற்றும் மாம்பழங்களால் ரூ 8,000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய பெண்: அவரின் எதிர்கால திட்டம் | Small Business 8000 Crore Empire With Mangos

தொடர்ந்து மாம்பழ பானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதுவும் ஸ்வீடன் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பான டெட்ராபாக்கில். அது வாடிக்கையாளர்களிடையே பெருமளவில் கவனத்தை ஈர்த்தது.

பட்டப்படிப்பை முடித்து தனது 17 வயதில் Parle Agro நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார் நதியா. அவர் முன்னெடுத்த ஆய்வில், நிருவனத்தின் 95 சதவிகித வருவாய் வருவது அவர்கள் நிறுவனத்தின் தயாரிப்பான Frooti என்ற மாம்பழ பானத்தில் இருந்து மட்டுமே.

2005ல் Appy Fizz என்ற பானத்தை Parle Agro நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் இந்தியாவில் முதல் முறையாக எலுமிச்சை பானத்தை Nimboo Pani என அறிமுகம் செய்தனர். 2015ல் Frooti என்ற மாம்பழ பானத்தை மீண்டும் அறிமுகம் செய்தனர்.

ரூ 20,000 கோடி சாம்ராஜியமாக

ஆப்பிள் மற்றும் மாம்பழங்களால் ரூ 8,000 கோடி சாம்ராஜியத்தை உருவாக்கிய பெண்: அவரின் எதிர்கால திட்டம் | Small Business 8000 Crore Empire With Mangos

மக்களிடையே அதும் பெரும் ஆதரவைப் பெற்றது. Parle Agro நிறுவனத்தின் மொத்த வருவாயில் Frooti மட்டும் 48 சதவிகித வருவாய் பங்களிப்பை அளித்துள்ளது. மேலும் Bailey என்ற பொத்தல் குடிநீரில் ரூ 1,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

2030ல் Parle Agro நிறுவனத்தை ரூ 20,000 கோடி சாம்ராஜியமாக உருவாக்க நதியா சவுகான் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Parle குழுமமானது 1929ல் மோகன்லால் சவுகான் என்பவரால் தொடங்கப்பட்டுள்ளது.

1959ல் மோகன்லால் சவுகானின் இளைய மகன் ஜெயந்திலால் என்பவர் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமாக மாற்றினார். இவர்களின் Thums Up, Limca, Gold Spot, Citra மற்றும் Maaza தயாரிப்புகள் இந்தியா முழுக்க பிரபலமானது.

இந்த நிறுவனம் பின்னர் ஜெயந்திலாலின் பிள்ளைகளான ரமேஷ் சவுகான் மற்றும் பிரகாஷ் சவுகான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பிரகாஷ் சவுகான் என்பவரே 1985ல் Parle Agro என்ற பெயரில் புதிதாக நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.