கடந்த 4 மாதத்தில் மாத்திரம் இஸ்ரேலுக்குச் சென்ற 2,771 இலங்கையர்கள்

0
41

இவ்வாண்டின் முதல் 4 மாத காலப்பகுதிக்குள் 2,771 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாதியர், விவசாயம் மற்றும் கட்டுமானம் ஆகிய மூன்று தொழில் துறைகளிலும் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி, தாதியர் தொழில்களுக்காக 409 பேரும், கட்டுமான தொழில்களுக்காக 804 பேரும் விவசாயத் தொழில்களுக்காக 1,558 பேரும் இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு தொழில் நிமித்தம் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சுமார் 172 இலங்கையர்கள் விவசாயத் தொழில்களுக்காக இஸ்ரேலுக்குச் செல்ல தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் 1,912 இலங்கையர்கள் மாத்திரமே வேலைவாய்ப்பு காரணமாக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.