சவுதி அரேபியாவில் திறக்கப்படவுள்ள முதலாவது மதுபானசாலை!

0
159
Luxury modern bar with drinks and bar stools

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தனது முதல் மதுபானசாலையை திறக்க அந்நாடு தயாராகி வருகிறது.

குறித்த மதுக்கடையை முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் நோக்குடன் சவுதி அரேபியா திறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சேவையை பெற வாடிக்கையாளர்கள் கைபேசி செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதிக் குறியீட்டைப் பெற வேண்டும்.

இதேவேளை, அவர்கள் வாங்கும் மாதாந்திர மதுபான ஒதுக்கீட்டு விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் திறக்கப்படவுள்ள முதல் மதுபானசாலை! எங்கு தெரியுமா? | Saudi Arabia To Open The First Liquor Store

இந்த நிலையில் தீவிர பழமைவாத முஸ்லிம் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும்.

எண்ணெய் ஏற்றுமதிக்கு பின்னரான ‘விஷன் 2030’ எனப்படும் பரந்த பொருளாதார திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

ஏனைய முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர் மதுபான சாலையை அணுக முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள்.

வெளிநாடொன்றில் திறக்கப்படவுள்ள முதல் மதுபானசாலை! எங்கு தெரியுமா? | Saudi Arabia To Open The First Liquor Store

எதிர்வரும் வாரங்களில் மதுபானசாலை திறக்கப்படும் எனத் திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்த ஒரு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளன.

சவுதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.