மன அழுத்த மருந்தால் வந்த வினை: தோல், வாய், செரிமான அமைப்பு முழுவதும் வலி மிகுந்த கொப்புளங்கள்

0
58

நியூசிலாந்தைச் சேர்ந்த சார்லோட் கில்மோர் என்ற 23 வயதுப் பெண், மன அழுத்தத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டதில் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கில்மோர் உட்கொண்ட மன அழுத்த மருந்தினால், (ஸ்டீவன் ஜொன்சன் சிண்ட்ரோம் Steven-Johnson-syndrome – SJS) என்ற நோய் ஏற்பட்டு அவரது தோல், வாய் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் வலி மிகுந்த கொப்புளங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த SJS நோய்த்தாக்கமானது பொதுவாக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளுடன் தொடங்குவதோடு, கொப்புளம், சொறி போன்றவையும் ஏற்படும்.

இந்த தாக்கமானது, லாமோட்ரிஜின் – Lamotrigine) என்ற ஆண்டிபிலெப்டிக் மருந்திலிருந்து உருவாகியிருக்கலாம் என மருத்துவர்கள் நம்புவதோடு இது SJS இன் ஒரு அரிதான பக்க விளைவு என்றும் அறியப்படுகிறது.

கில்மோர் சில வாரங்களுக்கு முன்பு காலையில் எழும்பியபோது, மார்பில் ஒரு வகை தொற்று மற்றும் வலி மிகுந்த சொறியால் அவதிப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார் கில்மோர், அங்கிருந்த செவிலியர்களால் அவரது நிலையை அடையாளம் கண்டுகொண்டும் எதையும் உறுதியாக அவர்களால் கூற முடியவில்லை.

அவரது உடலின் உட்புறத்திலிருக்கும் கொப்புளங்கள் அவரது தோலிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. மருந்தின் எதிர்வினையானது அவரது தோல், வாய், செரிமான அமைப்பு முழுவதும் வலி மிகுந்த கொப்புளங்களை ஏற்படுத்தியது.

இதனால் அவரால் சாதாரணமாக உணவு உண்ண முடியாமல் போனது. அதனால் ஒரு குழாயின் வழியாகவே மருத்துவர்கள் அவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கினர்.

துரதிர்ஷடவசமாக ஸ்டீரொய்ட் சிகிச்சை – Steroid treatment கூட கில்மோரின் உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அதுவும் இடைநிறுத்தப்பட்டது.

ஒரு மாத காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவரது உடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் அவரது கண்களில் கொப்புளங்கள் மற்றும் சொறி அதே இடத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.