3 ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

0
195

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைகன் இராணுவம் கூறியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக 22 மாதங்களாக நீடிக்கும் போரில் இது, உக்ரைனுக்கு கிடைத்த முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. உக்ரைனின் இந்த அறிவிப்புக்கு ரஷ்யா பதிலளிக்கவில்லை.

ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்கா கொடுத்துள்ள ஏவுகணை தற்காப்பு சாதனங்களை உக்ரைன் பயன்படுத்தியிருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் ரஷ்யாவின் மூன்று குண்டு வீசும் விமானங்களை குறைத்துவிட்டதாக உக்ரைன் விமானப் படையின் தளபதி மிகோலா ஒலெஷ்சுக் தெரிவித்துள்ளார். புத்திசாலித்தனமான திட்டமிட்ட நடவடிக்கை என விமானப் படையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனிடையே கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய விமான எதிர்ப்பு பிரிவை ஜனாதிபதி ஸெலன்ஸ்கி பாராட்டியுள்ளார்.

மொஸ்கோவின் பெப்ரவரி 2022 படையெடுப்பின் முதல் நாட்களில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. உக்ரைன் படையினர் மீண்டும் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.

பின்னர் நவம்பரில் கெர்சனில் உள்ள டினிபுரோ ஆற்றின் கிழக்கு கரைகளில் தமது நிலைகளை உக்ரைன் படையினர் வலுப்படுத்தின.