கோடிகளில் புரளும் ஷாலினி அஜித்குமார்.. சொத்து மதிப்பு தெரியுமா!

0
72

நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஷாலினி

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவர் தான் நடிகை ஷாலினி. இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பேபி ஷாலினியாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

இவர் பாசில் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படம் அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. முதல் படத்துக்கு பின்னரே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

சினிமாவை விட்டு போனாலும் கோடிகளில் புரளும் ஷாலினி... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Shalini Net Worth

 அடுத்ததாக அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தான் ஷாலினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்படி அமர்களம் படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. 

அமர்களம் படம் முடித்ததும் விஜய்க்கு ஜோடியாக கண்ணுக்குள் நிலவு மற்றும் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே ஆகியவற்றில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

சினிமாவை விட்டு போனாலும் கோடிகளில் புரளும் ஷாலினி... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Shalini Net Worth

ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போடும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு அஜித் – ஷாலினி ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் பிரியாத வரம் வேண்டும் என்கிற படத்தில் மட்டும் நடித்தார். அத்துடன் சினிமாவுக்கு என்டு கார்ட்டு போட்டுவிட்டார் சாலினி.

திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள், குடும்பம் என பிசியானதால் நடிகை ஷாலினி சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. 

சினிமாவை விட்டு போனாலும் கோடிகளில் புரளும் ஷாலினி... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Shalini Net Worth

நடிகை ஷாலினி இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது. 

சொத்து மதிப்பு 

 ஷாலினிக்கு சொந்தமாக ரூ.50 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாம். தற்போது கோடி கோடியாய் சம்பளம் கொடுத்தாலும் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கும் ஷாலினி, கடைசியாக சினிமாவில் நடித்தபோது ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினாராம்.

சினிமாவை விட்டு போனாலும் கோடிகளில் புரளும் ஷாலினி... சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Shalini Net Worth

இதுதவிர பல்வேறு சொகுசு கார்களும் ஷாலினியிடம் உள்ளதாம். நடிகை ஷாலினியின் கணவர் அஜித்குமாரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.