இருளில் மூழ்கும் அமெரிக்காவின் முக்கிய நகரம்! இரண்டு மாதத்திற்கு சூரியனே தெரியாது

0
67

சூரியன் உதிப்பதைக் கொண்டுதான் நாம் ஒரு நாளின் தொடக்கத்தை கணித்து கொள்கிறோம். அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் சுமார் இரண்டு மாதங்கள் வரை சூரியனே தெரியதாம். இந்த நகரத்தில் கடைசியாக சூரிய அஸ்தமனமானது 2023 நவம்பர் 18ம் திகதி என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய தீபகற்பம் அலாஸ்கா தீபகற்பம் தான். அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் வட மேற்கில் அமைந்துள்ளது.

இங்கு உள்ள உட்கியாகவிக் என்னும் நகரத்தில் சுமார் 4,500 மக்கள் வசிக்கின்றனர். அங்கு ஒவ்வொரு ஆண்டின் கடைசியிலும் சூரியன் இரண்டு மாதங்கள் வரை தென்படாதாம்.

ஏனெனில் இக்காத்தில் துருவ இரவு (Polar Night) சீசனுக்குள் இந்நகரம் நுழைகிறது. இந்த துருவ இரவு என்னும் நிகழ்வானது ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கு நிகழுமாம்.

Alaska town

துருவ இரவு என்பது பூமியின் தென் துருவம் மற்றும் வட துருவப் பகுதிகளில் 24 மணிநேரத்திற்கும் மேல் இரவு பொழுது நீடிப்பதைக் குறிக்கிறது.

பெரும்பாலும் இம்மாதிரியான நிகழ்வு துருவ வட்டங்களில் மட்டுமே நிகழும். இதில் உட்கியாகவிக் நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.

பூமியில் உட்கியாகவிக் நகரம் இருக்கும் பகுதியை எடுத்துக் கொண்டால் இந்த துருவ இரவு காலகட்டத்தில் பூமியானது அதன் அச்சில் 23 1/2 டிகிரியில் சாய்ந்திருக்கும்.

இப்படி பூமி அச்சின் சாய்வு காரணமாக, இந்த நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்க்காலத்தில் இந்த மாதிரியான ஆச்சரியமான நிகழ்வு நடக்கிறது.

நவம்பர் 19ம் திகதி முதல் இருளில் மூழ்கிய இந்த நகரத்தில் மீண்டும் சூரியனை அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 23ம் திகதி காண முடியும்.

Alaska town

சூரியன் இந்த நகரத்தில் கண்ணில் படாமல் இருக்குமே தவிர மற்ற படி பகல் வேளையில் இந்நகரமானது நீல நிறத்திலும் இரவு வேளையில் இருட்டாகவும் இருக்கும். மேலும் சூரியன் இங்கு தெரியாததால் மிகவும் கடுமையான குளிரை அனுபவிக்கக்கூடும்.

ஏனெனில் இங்கு இக்காலத்தில் வெப்பநிலையானது மைனஸ் 23 டிகிரியாக இருக்கும். இதனால் இங்கு வாழும் மக்கள் குளிரால் மிகவும் சிரமப்படுவார்கள்.

அலாஸ்காவில் உள்ள உட்கியாகவிக் நகரத்திற்கு செல்ல வேண்டுமானால் சாலை வழியாக செல்ல முடியாது. இந்நகரத்திற்கு செல்ல ஒரே வழி விமானம் தான். விமானத்தின் உதவியுடன் மட்டுமே இந்த நகரத்திற்கு செல்ல முடியும்.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் பிற பிராந்திய விமான நிறுவனங்கள் ஏங்கரேஜ் மற்றும் ஃபேர்பேங்க்ஸில் இருந்து வழக்கமான விமான சேவையை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.