இலங்கை திரையரங்கில் முதன் முறையாக வெளியாகும் விஜய்யின் லியோ ட்ரைலர்!

0
200

இலங்கை திரையரங்கில் முதன் முறையாக ”ஒருவன் டிஜிட்டல் பிரிவு” இன்று மாலை Savoy திரையரங்கில் லியோ ட்ரைலரை வெளியிடவுள்ளது.

நடிகர் விஜய்யின் லியோ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து, வெளியிட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி வெளியாக உள்ளது.

மேலும், படக்குழு இன்று மாலை 6.00 மணிக்கு லியோ ட்ரைலரை வெளியிடுகின்றது. இந்நிலையில் ”ஒருவன் டிஜிட்டல் பிரிவு” Savoy திரையரங்கில் லியோ ட்ரைலரை இன்று மாலை 6.30க்கு வெளியிடவுள்ளது.

இலங்கையில் முதல் தடவை இப்படி ஒரு சம்பவம் பதிவாக இருப்பது உலகவாழ் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.