தனுஷ்க குணதிலக்க விடுதலை..

0
138

அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பனங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் பெண் ஒருவரை சந்தித்த தனுஸ்க குணதிலக்க

2022 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 29 வயதுடைய பெண் ஒருவரை தனுஸ்க குணதிலக்க சிட்னியில் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து அவர் அப் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கமைய தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்ரேலிய அரச சட்டத்தரணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் அடிப்படையில் தனுஷ்க குணதிலக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியில் கைதானார்.

கைது செய்யப்பட்டவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.