தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த ஈழத்தமிழன்!

0
117

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை ஈழத் தமிழர் பூவன் மதீசன் எழுதியுள்ளார்.

நாடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த ஈழத் தமிழர்! | Eelam Tamils Wrote Songs In South Indian Cinema

ஜிகர்தாண்டா double x படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குனர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன் அதற்கேற்றது போல யாழ்ப்பாணத் தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தகவலை முகநூலில் பாபுகி முத்துலிங்கம் (Babugi Muthulingam) என்பவர் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.