கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு! உச்சக்கட்ட முறுகல்

0
216

இந்தியாவை தளமாகக் கொண்ட மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (19.09.2023) கனேடிய உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இராஜதந்திரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை

இந்தியாவின் உள் விவகாரங்களில் கனேடிய ராஜதந்திரியின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனடாவில் சீக்கிய காலிஸ்தானிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்கொல்லப்பட்டமை தொடர்பில், இந்திய ராஜதந்திரி ஒருவரை கனேடிய அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஹர்தீப் சிங்கின் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே “நம்பகமான” தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளோம்.

வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடு

அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார்.

இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தியாவின் முகவர்கள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு | Indian Gov Orders Canadian Diplomat To Leave

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். இது சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது.

கொலையின் பின்புலம்

இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார். இதை பற்றி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேசி இருக்கிறோம்.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு | Indian Gov Orders Canadian Diplomat To Leave

இந்திய பிரதமரிடம் பேசி இருக்கிறோம். விரைவில் இந்த கொலையின் பின்புலத்தை வெளியே கொண்டு வருவோம்.

இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.