அமெரிக்க பரப்புரையாளருக்கு பெருந்தொகை டொலர் பணத்தை செலுத்தியுள்ள மகிந்த! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

0
155

மகிந்த ராஜபக்ச நிர்வாகத்துடன் தொடர்புகளை வைத்திருந்த அமெரிக்க பரப்புரையாளரிடமிருந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக, அமெரிக்காவின் தூதுவராக இருந்த பாகிஸ்தான் ஊடகவியலாளர் பெண்ணான முனா ஹபீப் பணத்தை பெற்றக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015 ஆம் ஆண்டில் மூனா ஹபீப் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் திட்டத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

எனினும் அவரால் 100,000 டொலர் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.இதன்போது மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகளை கொண்டிருந்த அரசியல் நிர்ணயலாளரான இமாட் சுபேரி ஊடகவியலாளருக்கு 25,000 டொலர் நிதியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

சிறைத்தண்டனை

இதற்கிடையில் வரி ஏய்ப்பு, வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் பிரசார நிதி மீறல்களுக்காக சுபேரி, இப்போது அமெரிக்காவில் 12 ஆண்டு சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

இதேவேளை 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கும் போருக்குப் பிந்தைய பிம்பத்தை சரிசெய்வதற்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இமாட் சுபேரிக்கு பெருந்தொகை டொலர் பணத்தை செலுத்தியுள்ளது.

எனினும் சுபேரி இலங்கை அரசாங்கத்திற்காக என்ன பணிகளை நிறைவேற்றினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.