கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் தொடர்பில் கனடா வலியுறுத்தல்!

0
217

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வாய்வுப் பணிகளை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

அகழ்வாய்வுப் பணிகள் தொடர்பான விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதானம் மற்றும் சுதந்திரத்தை பேணுவது குறித்து கனடா, தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எனவும் ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்வுப் பணிகள் தொடர்பில் கனடா வலியுறுத்தல்! | Excavation Should Be Carriedcanada Emphasis

இதேவேளை, கருத்து சுதந்திரம், பொருளாதாரம், சமூக வலுவூட்டல், கலாசார உரிமைகள் என்பன சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கத்தின் ஊடாகவும், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்வுப் பணிகள் தொடர்பில் கனடா வலியுறுத்தல்! | Excavation Should Be Carriedcanada Emphasis

அடக்குமுறைகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதை ஏற்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக உரையாற்றிய பல நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் அகற்றப்பட்டமையை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது