ஈஸ்டர் தாக்குதல் நடக்கப் போகிறது என்று தெரிந்தும் மௌனம் காத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0
203

ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்கு முன் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பாதுகாப்பு உத்தியோத்தர்களுக்கு ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் ஒன்று நடைபெறப் போவதால் பாராளுமன்ற உறுப்பினர்களை தேவாலயங்களுக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டடிருந்தது.

இதை ஹரின் பெர்னாண்டோ, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது பெரும் பிரச்சனை ஆனது.

ஈஸ்டர் தாக்குதல் நடக்கும் என தெரிந்தும் மெளனம் காத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்? | Mps Kept Silent Knowing That The Easter Attack

இறுதியில் தனது தந்தையை காண வந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, தந்தையிடம் சொன்னதை அவர் தனக்கு சொன்னதாக தெரிவித்தார்.

அதேபோல மஹிந்தவை பக்கத்தில் வைத்துக் கொண்டு விமல் வீரவங்ச, இவருக்கும் அது தெரியும் என ஊடக சந்திப்பில் சொன்ன போது, மஹிந்த எனக்கு தெரியாது. ஆனால் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தெரிந்திருந்தது என்றார்.

ஈஸ்டர் தாக்குதல் நடக்கும் என தெரிந்தும் மெளனம் காத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்? | Mps Kept Silent Knowing That The Easter Attack

மக்கள் செத்து மடிவார்கள் என தெரிந்தே, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுடைய பாதுகாப்புக்காக இருந்தவர்களும் ஏன் அமைதியாக இருந்தார்கள்?

கொசிப் போல ஒரு தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தால், மக்கள் அவதானமாக இருந்திருப்பார்கள்? இவ்வாறு தகவலை வெளிப்படுத்தியிருந்தால் இழந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையாவது குறைத்திருக்க முடிந்திருக்கும். என குறித்த தகவலை முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.