மலேசிய பிரதமரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

0
233

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துள்ளார். இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த்.

அவர் தற்போது மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அன்வர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இன்று ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.