எசல திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண இணைந்த ஜனாதிபதி ரணில்

0
213

கண்டி எசல திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹெரா 7.03 மணியளவில் சுப வேளையில் ஆரம்பமானது.

இலங்கையின் மிகப் பழமையான மற்றும் பிரமாண்டமான திருவிழாக்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலத்துடன் இன்று கண்டி வீதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

எசல திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண இணைந்த ஜனாதிபதி ரணில் | Esala Perahera Festival Final Day Visit Seen Ranil

எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை

இதேவேளை எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில்பிரேமஜயந்த், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்குவிஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலனும் (Chris Van Hollen), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் பெரஹராவைக் கண்டுகளித்தனர்.

எசல திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண இணைந்த ஜனாதிபதி ரணில் | Esala Perahera Festival Final Day Visit Seen Ranil