பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை! அனுமதி வழங்கிய அமைச்சரவை

0
202

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் மீள் வரைவு செய்யும் வகையில், சட்ட வரைஞரை அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 27.02.2023 அன்று அமைச்சரவை கூட்டத்தின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அரச வரைஞர் தயாரித்த வரைவு யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

திருத்தங்களை அறிமுகப்படுத்த தீர்மானம்

எனினும் வரைவு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உட்பிரிவுகளில் ஆர்வமுள்ள பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு குறித்த வரைவு சட்டமூலத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை! அனுமதி வழங்கியது அமைச்சரவை | Draft Bill Of Anti Terrorism Act

அதன்படி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே வரைந்த வரைவு யோசனையில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களை இணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை மறுவடிவமைக்க சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.