விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள்

0
174

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

கோரிக்கை

விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் | Easter Attack Srilanka

இந்த அடிப்படை உரிமை மனுக்களுக்கு பல தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த மனுக்களை விசாரிக்க பட்டியலிட்டுள்ளது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக மீதமுள்ள 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலும் கால அவகாசத்தை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.