இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

0
199

கனடாவில் காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் கணிசமாக உள்ள நிலையில் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் மூலம் இந்தியர்களுக்கு அச்சுறுதல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் பரபரப்பு சம்பவம் நேற்று நடைபெற்றது. தூதரகம முன் திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான முழகங்களை எழுப்பினர்.

தேசிய கொடிய செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்

அத்துடன் இந்திய தேசிய கொடிய செருப்பால் அடித்து அவமதித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய முழக்கங்கள் மற்றும் வாசகங்கள் இந்த போராட்டத்தில் இடம் பெற்றிருந்தது.

இவர்கள் போராட்டத்திற்கு எதிராக இந்தியர்களும் தேசிய கொடியை ஏந்தி பதில் போராட்டம் நடத்தினர். அதேவேளை சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையுடன் பஞ்சாப்பை மையமாகக் கொண்டு காலிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் | Khalistan Supporters Hit Indian Flag Canada

இந்த இயக்கம் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆங்காங்கே இந்த இயக்கத்தை சில தலைவர்கள் தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறிய சீக்கியர்களில் ஒரு தரப்பினர் காலிஸ்தான் இயக்கத்தை முன்னெடுத்து இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.