இனிமேல் நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீர்கள்..

0
190

நமது உடம்பிற்கு நீர்ச்சத்து என்பது மிக மிக முக்கியமாக இருக்கும் நிலையில், தண்ணீரை எவ்வாறு அருந்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தண்ணீரை நின்று கொண்டு குடிக்கலாமா?

நபர் ஒருவர் தினமும் 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது கட்டாயம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் நம்மில் பெரும்பாலான நபர்கள் இதனை தெரிந்து வைத்திருந்தும், அதனை சரியாக செயல்படுத்துவதில்லை.

இவை ஆரோக்கியத்திற்கு சில தொந்தரவுகளை ஏற்படுத்தும். பொதுவாக தண்ணீரை நின்று கொண்டு குடிப்பது ஆரோக்கியத்தை பாதிக்குமாம்.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

ஒருவர் நின்று கொண்டு தண்ணீர் குடீப்பது செரிமான அமைப்பை பாதிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் சீர் குலைக்கின்றது. மேலும் நின்று கொண்டு குடிப்பதால் உள்ளே செல்லும் தண்ணீரில் வேகமும் அதிகரிக்கும்.

இது திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து அஜீரணத்தை ஏற்படுத்தும் என்றும் உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடம்பிற்கு அதிக பலன் கிடைக்கும்.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் மூட்டு பகுதியில் தண்ணீர் தேங்கி, மூட்டு வலியை ஏற்படுத்துவதுடன், நச்சு திரட்சியையும் அதிகரிக்கின்றது.

உங்களது உடலை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். நீரிழப்பு பிரச்சினை ஏற்பட்டுவிட்டால், அது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், தினமும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

வெறும் தண்ணீரை எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் இளநீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய பழச்சாறு, எலுமிச்சை நீர் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற திரவ பானங்களை சேர்த்துக் கொள்ளவும்…