ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் பிரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். இன்று (15.06.2023) எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்து வருகிறது.
இதேவேளை அவுஸ்திரேலியா அணியும் உற்சாகமாக மோதவுள்ளது. இந்நிலையில் முதல் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
அதாவது பென் டக்கெட், ஜாக் க்ராவ்லி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பெயர்ஸ்டோ, மொயின் அலி, ஸ்டூவர்ட் போர்ட், ராபின்சன், ஜிம்மி ஆண்டர்சன். ஆகிய இவர்களே அணியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.