மாலத்தீவில் வேலைவாய்ப்பு; 84 லட்சம் ரூபாய் மோசடி!

0
546

மாலைதீவுக்கு தொழிலுக்கு அனுப்புவதாகக் கூறி 197 தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சுமார் 84 இலட்சம் ரூபா மோசடி செய்த நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மாலைதீவில் வேலைவாய்ப்பு; 84 இலட்சம் ரூபா மோசடி! | Employment In Maldives 84 Lakh Rupees Scam

மாலதீவில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சுற்றுலா விடுதிகளின் பணிக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதாக கூறி பிளாக்வாட்டர்ஸ் தோட்டத்தில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாலைதீவில் வேலைவாய்ப்பு; 84 இலட்சம் ரூபா மோசடி! | Employment In Maldives 84 Lakh Rupees Scam

அதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி மீண்டும் தோட்டத்துக்கு வந்த தரகர், நவம்பர் 15ஆம் திகதி தம்மை மாலைதீவுக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் அதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி தொழிலாளர்களிடம் கூறி மேலும் ஒரு தொகையை வசூலித்துள்ளார்.

இதன்படி, தலா 12,500 ரூபா பெற்றுக்கொண்ட தரகர், தோட்ட தொழிலாளர்களை மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைத்து நிலையிலேயே தரகர் தலைமறைவாகியதாக பொலிஸில் முறைப்பாட செய்யப்பட்டுள்ளது.