அமெரிக்காவில் பெண்ணை சுட்டுக்கொன்ற சிறுமி!

0
295

அமெரிக்காவில் 10 வயதான சிறுமி ஒருவர் பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெண் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் 10 வயதான சிறுமியை அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகர பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை சிறுமி சுட்டுக்கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 41 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சந்தேகநபரான சிறுமி மீது இன்னும் வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சிறுமியின் தாயாரும் தடுத்துவைக்கப்பட்டள்ளதாக ஒர்லாண்டோ நகர பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் வயது. சூழ்நிலைகள், உட்பட அனைத்து விடயங்களும் ஆராயப்பட்ட பின்னர், குற்றச்சாட்டு பதிவுசெய்து குறித்து தீர்மானிக்கப்படும் என புளோரிடா மாநில நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.