கனடாவில் அனுமதியின்றி பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்த பொலிஸார்: சட்ட நடவடிக்கை எடுத்த தாய்

0
604

கனேடிய பெண் ஒருவர் காலையில் கண் விழிக்கும்போது தன் வீட்டுக்குள் இரண்டு பொலிசார் நிற்பதையும், அவர்கள் தன் மகளை விசாரணைக்குட்படுத்தியதையும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

Newfoundlandஇலுள்ள ஒரு வீட்டில் Cortney Pike என்ற பெண் தனது காதலரான Andrew Dunphyயுடன் படுத்திருக்கும்போது அதிகாலை 5.20 மணியளவில் தங்கள் அறைக்கு வெளியில் இருந்து யாரோ அழைப்பதைக் கேட்டிருக்கிறார்.

கதவைத் திறந்தால் வீட்டுக்குள் பொலிசார் இருவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் காணாமல் போன ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் அந்தப் பெண்ணைக் குறித்து ஏதாவது தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில் தரைத்தளத்திலிருந்த படுக்கையறையிலிருந்து Cortneyயின் மகள் Nevaeh (11) மேலேறி வந்திருக்கிறாள்.

அவள் வந்து தான் தூங்கிக்கொண்டிருந்ததாகவும் தன் முகத்தில் யாரோ டார்ச் அடித்ததால் தான் விழித்துக்கொண்டதாகவும் தன்னிடம் காணாமல் போன ஒரு பெண்ணைக் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூற Cortneyக்கு பற்றிக்கொண்டு வந்திருக்கிறது கோபம்.

அவர்கள் எப்படி எங்களுடைய அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தார்கள் எப்படி என் அனுமதியில்லாமல் தூங்கிக்கொண்டிருந்த என் மகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் Cortney.

பொலிஸ் நிலையம் சென்று தன் கோபத்தை பதிவு செய்துவிட்டு அவர்களுடைய செயல்களுக்கு பதில் வேண்டும் என்று கூறியுள்ள Cortney சட்டத்தரணி ஒருவர் உதவியுடன் முறைப்படி புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.