ரணில் அரசாங்கத்திற்கு அதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

0
169

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ (mahinda Rajapaksa) இராஜினாமா செய்த நிலையில் நேற்று முன்தினம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்று கொண்டார்.

இந்த நிலையில், கட்சியின் சுதந்திர உரிமையைப் பாதுகாப்பதுடன், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.