6,700க்கும் மேற்பட்ட அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்யும் சமூக உண்டியல்

0
561

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு வசதி குறைந்த முதி­யோ­ருக்­கும் குடும்­பங்­க­ளுக்­கும் 6,700க்கும் மேற்­பட்ட அன்­ப­ளிப்­புப் பைகளை சமூக உண்­டி­யல் விநி­யோ­கம் செய்­ய­வி­ருக்­கிறது.

ஃபு டாய் என்று அழைக்­கப்­படும் அந்த அன்­பு­ளிப்­புப் பைகளில் வீட்­டுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களும் உண­வுப் பொருட்­களும் இருக்­கும். ஃபு டாய் என்­பது ஆசி­யும் மகிழ்ச்­சி­யும் நிறைந்த பைகள் என்று பொருள்.

எட்­டா­வது ஆண்­டாக இந்த முயற்­சி­யில் சமூக உண்­டி­யல் இறங்­கி­யுள்­ளது. இந்த ஆண்­டுக்­கான திட்­டம் ஹார்ட்­வார்­மர்ஸ் எனும் தொண்­டூ­ழிய குழு­வு­டன் இணைந்து நடத்­தப்­ப­டு­கிறது.

அரீனா@அவர் தெம்­ப­னிஸ் ஹப்­பில் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யி­லி­ருந்து நேற்று வரை 500க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் அன்­ப­ளிப்­புப் பைக­ளைத் தயார் செய்­த­னர்.

“நிச்­ச­ய­மற்ற நிலை, புதிய சவால்­கள் ஆகி­ய­வற்றை கொவிட்-19 ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இருப்­பி­னும், நம்­மி­டையே இருக்­கும் வசதி குறைந்­தோ­ருக்கு ஆத­ரவு அளிக்க நல்ல வாய்ப்பு கிடைத்­துள்­ளது என்று திட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கிய திரு ஃபூ சே தாய் தெரி­வித்­தார்.

அன்­ப­ளிப்­புப் பை திட்­டத்தை வெற்றி பெற செய்த பங்­கா­ளி­கள், நன்­கொ­டை­யா­ளர்­கள், சமூ­கத்­தி­ன­ருக்கு அவர் நன்றி தெரி­வித்­தார். சவால்­களை எதிர்­கொள்­ப­வர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஒரு பெரிய மாற்­றத்தை அவர்­கள் கொண்டு வந்­துள்­ள­னர் என்­றார் அவர்.

“எங்­கள் சமூக சேவை திட்­டம் மூலம் பல­ன­டை­வோ­ருக்கு இம்­மா­தி­ரி­யான அன்­ப­ளிப்­புப் பைகளை விநி­யோ­கம் செய்ய நாங்­கள் பல­முறை முயன்­றுள்­ளோம். அன்­ப­ளிப்­புப் பைகளை விநி­யோ­கம் செய்­யும் சமூ­கத்­துக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்,” என்று கேர் கார்­னர் சிங்­கப்­பூ­ரின் குடும்ப, சமூ­கச் சேவை­க­ளின் வட­மேற்கு குழும இயக்­கு­நர் திரு இயன் பீட்­டர்­சன் கூறி­னார்.

அன்­ப­ளிப்­புப் பைகள் விநி­யோ­கத்தை சமூக, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று தொடங்­கி­வைத்­தார். அவ­ரு­டன் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, கல்வி மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங் ஆகி­யோர் இருந்­த­னர்.

அரீனா@அவர் தெம்­ப­னிஸ் ஹப்­பில் அன்­ப­ளிப்­புப்

பைகள் தயார் செய்­யப்­பட்ட இடத்­தில் தமது தெம்­ப­னிஸ் தொகு­தி­யைச் சேர்ந்த குடும்­பங்­க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகளை அமைச்­சர் மச­கோஸ் வழங்­கி­னார்.

அன்­ப­ளிப்பு வழங்­கும் திட்­டத்­துக்­காக $2 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான நிதி­யைத் திரட்­டி­ய­தாக சமூக உண்­டி­யல் நேற்று அறி­வித்­தது. திரட்­டப்­பட்ட தொகை சமூக உண்­டி­ய­லு­டன் தொடர்­புள்ள 80க்கும் மேற்­பட்ட சமூக சேவை அமைப்­பு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

ஸ்டாண்­டர்ட் சார்­டர்ட் வங்கி, டெல்ஸ்ட்ரா சிங்­கப்­பூர் தொலை­தொ­டர்பு நிறு­வ­னம், எம்­டிஎம் சரு­மப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னம், லக்ஸ்­லெ­சி­கோன் சொகு­சுப் பொருள் நிறு­வ­னம் ஆகி­ய­வை திட்­டத்­துக்கு நன்­கொடை வழங்­கின.