பயணம் செல்வோருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை இல்லை

0
318

சிங்கப்பூரை விட்டு வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல தகுந்த காரணம் இருப்போருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்னுரிமை இல்லை என்று சுகாதாரத்துக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.

கொவிட் – 19 தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருப்பது அதற்குக் காரணம் என்று கூறினார்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் காண வெளிநாடு செல்லத் தேவைப்படும் குடிமக்களுக்கு, முன்னதாகவே தடுப்பூசி போடுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

குறுகிய அவகாசத்தில் வெளிநாடு செல்ல தகுந்த காரணம் உள்ளோருக்கு அந்த ஊசியை முன்னதாகவே போடலாமா என்றும் கேட்கப்பட்டது.