வியட்நாமில் கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடல்

0
309

வியட்நாம் தலைநகர் ஹனோயில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இன்று முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியமற்ற வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் புதிதாக 50 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டத்தைத் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வடமாநிலமான ஹை டுவொங்கைச் (Hai Duong) சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.