ரவுடி பினுவுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக்காவல்..!

0
90
Rowdy Binu 26th day Court guard india tamil news

பூந்தமல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் தனது பிறந்தநாள் விழாவில் ‘ஜிகர்தண்டா’ படப் பாணியில் பினு, சக ரவுடிகளுடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடினார்.Rowdy Binu 26th day Court guard india tamil news

அன்றிரவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பினு உள்ளிட்ட 75 பேர் கூண்டோடு கைதானார்கள். இவ்வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பினு தலைமறைவானார்.

6 மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திர எல்லையை ஒட்டிய, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாதிரிவேடு என்ற ஊரில், பினு உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் இல்லத்தில் பினு உள்ளிட்டோரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :