வீட்டிற்கே மதுபானங்கள்..! – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..!

0
96
Alcohol delivery home - Maharashtra Government Scheme india tamil news

மதுபானங்களை வீட்டிற்கே நேரடியாக வினியோகம் செய்ய மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.Alcohol delivery home – Maharashtra Government Scheme india tamil news

இது தொடர்பாக பேசிய மாநில கலால் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, மதுபானங்களை குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.

மின் வணிக இணையதளங்கள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பது போல் மதுபானங்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மதுபான துறையில் இந்த திட்டம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் நாட்டிலேயே இது போன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைப் பெற்ற பிறகே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் சந்திரசேகர் தெரிவித்தார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :